Saturday, 12 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். ஏசாயா 60 : 19
* இருளில் நீங்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களோ?
* உங்களது கடந்தகாலத்தைப் பற்றிய குற்ற உணர்வினால் சிந்தையில் போராடுகிறீர்களோ?
* உங்கள் கண்களை ஏறெடுத்து எதிர்காலத்தை நோக்கிப் பாருங்கள்.
* இயேசுவின் இரத்தத்தினால் நீங்கள் கழுவப்பட்டவர்களல்லவா?
ஆமென்றால்,
* இயேசுவுக்குள் நீங்கள் புதுச் சிருஷ்டியாயிருக்கிறீர்கள்.
* உங்களது கடந்தகாலப் பாவங்களெல்லாம்
மன்னிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் புதிதாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
* நீங்கள் இனியும் இருளில் இருக்கவேண்டிய அவசியமில்லை.
* உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு ஓர் வெளிச்சம் இருக்கின்றது. ஆம். இயேசுவே அவ்வெளிச்சம்.
* அவரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். அவரது மகிமை உங்களுக்குள்ளும் உங்கள் மேலும் காணப்படும்.
* உங்களுக்குள் தூண்டப்படும் வெட்கம் மற்றும் நிந்தனையினால் திகிலடைவதை நிறுத்துங்கள்.
* சுய ஆக்கினையினின்றும் உங்கள் கூட்டை விட்டும் வெளியே வாருங்கள்.
* தேவ திட்டத்தாலும் உன்னத நோக்கத்தாலும் நிரம்பிய புதிய வாழ்க்கை ஒன்று உங்களுக்கு இருக்கிறது.
* கர்த்தருக்காகப் பெரிதும் பலத்ததுமான காரியங்களைச் செய்ய, நீங்கள் போகவேண்டிய தூரம் வெகுதூரம் உள்ளது.
ஓ போர்ச்சேவகனே(போர்ச்சேவகியே), எழும்பு!
ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, இந்த வெளிப்பாட்டிற்காக உமக்கு நன்றி. எனது விசுவாசத்தைப் பெலப்படுத்தி, எதிர்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை இன்னும் எனக்குத் தாரும். ஆமென்.
******
0 comments