Friday, 11 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள். தானியேல் 10: 19
அன்பு தேவ பிள்ளையே,
* திடன்கொண்டு தைரியமாயிருங்கள்.
* தேவன் உங்கள்மேல் மிகுந்த கிருபையாயிருக்கிறார், நீங்கள் அவரது பிரியம்.
* இயேசுவின் இரத்தத்தினாலே நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களது பழைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கின்றன.
* குற்ற உணர்விற்கு எந்தவொரு இடமும் தராதிருங்கள்.
* சாத்தானின் பொய்களுக்கு இடம் தராதிருங்கள். உங்களது கடந்த காலப் பாவங்களை நினைப்பூட்டி, உங்களை மனம் தளர வைப்பதே அவனது நோக்கமாயிருக்கிறது.
* நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டவர்களென்று, சத்தியத்தினால் உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ளுங்கள்.
* ஒரு புதிய எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்குள் மகிமையும் அற்புதமானதுமான ஒன்று இருக்கிறது.
* பின்னானவைகளை மறந்து இயேசுவுக்குள் மகிமையாய் உண்டாக்கப்பட்டிருக்கிற எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது தயவிற்காகவும் அன்பிற்காகவும் நன்றி. என்னைப் புதிய மனிதனாய் மாற்றுவதற்காய் நன்றி. உம்முடைய பரிசுத்தத்தால் அலங்கரிக்கப்பட்ட, குற்ற உணர்வில்லாத வாழ்க்கை வாழ எனக்கு உதவும். ஆமென்.
******
0 comments