WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, சுகமாகுங்கள். இயேசு உங்கள் நோய்களைச் சுமந்துகொண்டார். [17th Nov]

Thursday, 17 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்..

மத்தேயு 8:17


* நீங்கள் வியாதிப்பட்டுச் சோர்ந்துபோனீர்களோ?


* உங்களது உடல் நலத்தைப் பாதுகாக்க நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளின் எண்ணிக்கையைப் பார்த்து மனம் குமுறுகுறீர்களோ?


* இடையறாத உங்கள் மருத்துவச் செலவுகளினிமித்தம் ஏற்படும் பணப் பற்றாக்குறை பற்றி கவலைப்பட்டுக் கலங்குகிறீர்களோ?

* இயேசு கிறிஸ்துவில் இன்னும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு.


* அவர் அற்புதம் செய்யும் தேவன்.


* அவர் உங்களைச் சுகமாக்கி, உங்களது நோய்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை ஆக்குவார்.


* நமது பெலவீனங்களை அவர் சுமந்துகொண்டார்.


* இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டு.


புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்துடன் அவரிடம் வாருங்கள்.


* உங்களது சரீரத்தை முறையின்றிப் பயன்படுத்துகிறீர்களா என்று உங்கள் வாழ்க்கையைச் சற்றுப் பரிசோதித்துப் பாருங்கள்.


* ஆமென்றால், ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள சில காரியங்களைச் சரிசெய்யுங்கள்.


* அவரது வாக்குத்தத்தங்களை உரிமை கோரி உங்களை சுகமாக்கும்படி இயேசுவிடம் கேளுங்கள்.


அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்.


ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது சரீரத்தை சுகப்படுத்தி, எனது வியாதிகளில் இருந்து என்னை விடுவியும். எனது சரீரத்தை நன்றாய்ப் பேணிப் பராமரிக்க, நான் முழு முயற்சியை மேற்கொள்ளுவேன். ஆமென்.


image


******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#135 Dec 17, 2020

{{contact.first_name}}, BE HEALED. JESUS BORE YOUR SICKNESSES. [17th Dec]

Read issue →
#134 Dec 16, 2020

{{contact.first_name}}, உங்களோடு வாழ இயேசு மீண்டும் வரப்போகிறார். [16th Nov]

Read issue →