WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

இன்றைய வார்த்தை

Dear ,


இன்றைய வார்த்தை :


image



சம்பவம்:


* கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட இஸ்ரவேல் தலைவர்கள் மோசேயினிடம் திரும்பி வந்தபொழுது காலேபும் யோசுவாவும் மட்டுமே நம்பிக்கையான வார்த்தைகளை சொன்னார்கள்.


* மற்ற தலைவர்களோ பயத்தினாலும் அவநம்பிக்கையினாலும் நிறைந்தவர்களாய், முழு இஸ்ரவேல் மக்களுடைய இருதயத்தையும் பயத்தினால் சோர்வடைய பண்ணிவிட்டார்கள்.


* இந்த அவநம்பிக்கையான வார்த்தைகளை கேட்ட இஸ்ரவேல் மக்கள் முரட்டாட்டம் பண்ணுகிறவர்களாய் மாறிப் போனார்கள்.


* இஸ்ரவேல் மக்களுடைய முரட்டாட்டத்தையும் அவநம்பிக்கையையும் பார்த்த ஆண்டவர் மிகவும் கோபம் கொண்டார்.


* காலேபும், யோசுவாவும் விசுவாசத்தில் உறுதியாக நின்றபடியால்,

ஆண்டவர் அவர்கள் மேல் மிகவும் பிரியமாக இருந்தார்.


முடிவு:

* ஆண்டவரை நம்பாமல் முரட்டாட்டம் பண்ணின அத்தனை மக்களும் வனாந்தரத்திலே அழிக்கப்பட்டு போனார்கள்.


* காலேபும், யோசுவாவுமோ, கானான் தேசத்தை சுதந்தரித்த இஸ்ரவேல் சேனையில் பங்கு பெற்றார்கள்.


* காலேப் அவன் விரும்பியபடியே எபிரோன் என்னும் மலை தேசத்தை பரிசாக பெற்றுக் கொண்டான்.


சோதிக்க:

* நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள்?


* உங்கள் உள் மனதின் நம்பிக்கை களுக்காகவும் ஆண்டவர் பேரில் இருக்கும் விசுவாசத்திற்காகவும் உறுதியாக நிற்கும் நபரா நீங்கள்?


* உங்களுக்கு எதிராய் நிற்பவரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உங்கள் இருதயத்தின் நம்பிக்கைக்காக மனம் தளராமல் மன உறுதியோடு நிற்பீர்களா?


கற்றுக்கொள்ளும் பாடம்:

உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நின்றால் ஆண்டவருக்கு விரோதமாய் இருப்பவர்கள் அழிந்து போனாலும், உங்களையோ எல்லோருக்கும் மேலாக கனப்படுத்தி பலனளிப்பார்.


ஜெபம்:

ஆண்டவராகிய இயேசுவே, எனக்கு விசுவாசத்தையும் எல்லா சூழ்நிலைகளிலும் உமக்காக நிற்கும் மன உறுதியையும் தரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#3 Aug 27, 2020

Today's word (27th Aug) _ Test email

Read issue →
#1 Aug 26, 2020

இன்றைய வார்த்தை

Read issue →