WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, உங்கள் சந்ததியார் வளர்ந்து பெருகுவார்கள். [14th Nov]

Monday, 14 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். ஏசாயா 54: 3


அன்பான தேவ பிள்ளையே,


இஸ்ரவேல் தேசத்திற்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தம், புதுப்பித்தலையும், ஜனங்களின் பெருக்கத்தையும் குறிக்கிறது.


* உங்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தவறவிட்டதினிமித்தமோ, அல்லது பணியிடத்தின் பின்னடைவு அல்லது ஊழியத்தின் சவால்களினிமித்தமோ அழுதுகொண்டிருக்கிறீர்களோ?


* பணித்தளத்தில் அல்லது தேவன் தந்த தரிசனத்தில் உங்களது, கடின உழைப்பினால் வெளிவரக்கூடிய, எதிர்பார்க்கப்படும் பலன்களைக் குறித்துக் கருத்தாயிருக்கிறீர்களா?


* நீங்கள் துவங்கின நற்கிரியையை யார் தொடரப்போகிறார் என்று கலங்குகிறீர்களோ?


* எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்துவிட்டு, அவர் இடைப்படுவதற்கு இடங்கொடுங்கள்.


* அவர் உங்கள் கரங்களின் கிரியைகளை உறுதிப்படுத்தி, உங்களது எல்லைகளை விஸ்தாரமாக்குவார்.


* உங்களது சாதனைகளைத் (பணிகளைத்) தொடர தேவபக்தியுள்ள ஒரு சந்ததியை அவர் எழுப்புவார்.


* உங்களது கடின உழைப்பு வீணாவதில்லை. அது பொய்த்துப் போகாதிருக்கும். உங்கள் சந்ததியார், தொடர்ந்து செழித்து தேவனுடைய மகிமைக்காக வளர்ந்து பெருகுவார்கள்.


திடன்கொள்ளுங்கள்.

கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.


ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, பெருகவும் புதுப்பிக்கவும் நீர் கொடுத்த வாக்குத்தத்தத்திற்காக நன்றி. எனது சந்ததியார் உமக்குள் ஆழமாய் வேரூன்றி, வளர்ந்து, உமது மகிமைக்காகத் தொடர்ந்து செழித்திருக்கட்டும். ஆமென்.


image


******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#128 Dec 14, 2020

{{contact.first_name}}, YOUR DESCENDANTS SHALL GROW AND MULTIPLY. [14th Dec]

Read issue →
#127 Dec 13, 2020

{{contact.first_name}}, உங்கள் கூப்பிடுதலுக்குத் தேவன் பதில் தருவார். [13th Nov]

Read issue →