Sunday, 6 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். லேவியராகமம் 26: 12
தேவனுடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுமுண்டு என்று வேதம் சொல்லுகிறது.
ஆம், எனது நண்பர்களே!
* தேவன் உங்களை, உங்களது கடந்தகாலப் பாவங்களிலிருந்தும் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் விடுவித்தது மட்டுமல்ல, தொடர்ந்து உங்கள் நடுவிலே உலாவி, நீங்கள் அவரில் நிலைத்திருப்பதை உறுதி செய்கிறார்.
* இது, உங்களுக்குப் பெரும் உதவியும் உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுமல்லவா?
* அவர் உங்களை வெகுவாய் நேசிக்கிறார்.
* அவர் உங்களோடுள்ள ஐக்கியத்தைப் பெலப்படுத்தி, உங்களைப் பெருமைப்படுத்த விரும்புகிறார்.
* நீங்கள் அவருடைய தலைசிறந்த படைப்பு. இந்த உலகத்தில் மட்டுமல்ல, நித்தியத்திலும் கூட, நீங்கள் ஒரு மகிமையான எதிர்காலத்திற்காக முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
* வாக்குப்பண்ணினபடியே அவர் உங்களைத் திக்கற்றவர்களாய் விடுவதில்லை.
* ஆனால், அவர் எப்போதும் உங்களோடிருந்து அவருக்குள்ளும் அவரது மகிமையான வழிகளுக்குள்ளும் நீங்கள் வளரச் செய்வார்.
* உங்களது பெலவீனங்கள் மற்றும் தோல்விகளினின்று வெற்றிபெறச் செய்து, அவர் உங்களை மறுரூபமாக்குவார்.
இயேசுவின் உதவியினால், ஒரு மாபரும் வெற்றியைச் சுதந்தரிக்க உற்சாகம் கொள்ளுங்கள்.
ஜெபம்:
கர்த்தராகிய இயேசுவே, எனது தேவனாயிருப்பதற்காகவும், உம்முடைய சொந்தமாய் என்னைக் கருதி, உம்மோடுள்ள எனது உறவை நான் தக்கவைப்பதற்காகவும் நீர் தந்த வாக்குக்காக உமக்கு நன்றி. நான் உமது மகிமைக்காய்ப் பிரகாசிக்கட்டும். ஆமென்.
******
0 comments