Dear ,
இன்றைய வார்த்தை
மோசேயின் முகத்தில் உண்டாயிருந்த கர்த்தருடைய மகிமை, தயவையும், மதிப்பையும், கனத்தையும் கொண்டு வந்தது. ஜனங்கள் உண்மையாய் அவனைப் பின்பற்றினர்.
* உங்களுடைய சபை, அலுவலகம், அல்லது குடும்பத்தில் நீங்கள் தலைமைத்துவம் வகிக்கிறீர்களா?
* நல்ல திறம் வாய்ந்த தலைவராக நீங்கள் அங்கிகரிக்கப்படவேண்டுமா?
அப்படியென்றால், தேவனுடைய மகிமையை நாடுங்கள்.
* தேவனுக்கு முன்பாக மோசே, மிகுந்த தாழ்மையுள்ளவனாயும், எல்லாரைக் காட்டிலும் அவரைக் கனம்பண்ணுகிறவனாயும் இருந்தான்.
* இதே கொள்கையையும் குணாதிசயத்தையும் நாம் கடைபிடிக்கும் போது, தேவன் நம்மை உயர்த்துவார்.
* உங்கள் அனுபவங்கள், சாதனைகள், செல்வாக்கு, பேர் புகழ் எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.
* ஒவ்வொரு நாளும் புதிய நாளென்றும் புதிய துவக்கமென்றும் நினைவு கூறுங்கள்.
* எல்லா வேளையிலும் தேவனுக்கு முன்பாகத் தாழ்மையாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* அவர் உங்களை உயர்த்துவார்.
* மற்றோரைத் தேவனுடைய வழிகளில் நடத்தக்கூடிய மாபெரும் தலைவராயிருக்கும்படி அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
* அவருடைய பாத்திரமாய் இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.
* உங்கள் வழிகளிலெல்லாம் தமது முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள் மேல் கிருபையாயிருப்பார்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு முன்பாக நான் எப்போதும் தாழ்மையாயிருக்க உதவும். உம்முடைய மகிமை என் முகத்தின் மேல் பிரகாசிக்கட்டும். ஆமென்.
******
0 comments