Monday, 21 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.
லூக்கா 12: 32
* பெரிய சாதனைகள் அல்லது
ஆசிர்வாதங்களுக்குப் பாத்திரமானவரல்ல, என்று உங்களைக் குறித்து நீங்கள் எண்ணுகிறீர்களோ?
* உங்களது தாழ்வு மனப்பான்மையினிமித்தம் உங்களை நீங்களே இழிவு படுத்துகிறீர்களோ?
* கடந்த காலத்தின் பெரிய சாதனையாளர்கள், அல்லது தற்போதைய உலகத்தில் இருப்பவருக்கு எதிராக, நீங்கள் மிகவும் சிறியவராய்த் தெரிகிறீர்களோ?
தேவனுடைய இராஜ்யத்தில் நீங்கள் ஒரு பங்குதாரர் என்பதை நினைவுகூருங்கள்.
* இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, உங்களுடைய எதிர்காலத்திற்கான பெரிதான தேவ திட்டத்துக்குள் நீங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள்
* உங்கள்மேல் உள்ள தேவ தயவையும், கிருபையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
* உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவால், உங்கள் கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மேலான பெரிய காரியங்களை உங்களால் செய்ய முடியும்.
* பயப்படாதிருங்கள்.
* இயேசுவின் மந்தையில் நிலைத்திருங்கள்.
* அநேக காரியங்களைச் சாதித்துத் தொடர்ந்து வெற்றியாய் இருப்பீர்கள்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது எதிர்காலத்தைப் பற்றிய உம்முடைய திட்டங்களுக்காகவும் நோக்கத்திற்காகவும் நன்றி. பயமின்றி, உண்மையாய் உம்முடைய வழிகளில் திடமாய் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
0 comments